கந்தம்பாளையம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது 100 லிட்டர் ஊறல் அழிப்பு

கந்தம்பாளையம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது 100 லிட்டர் ஊறல் அழிப்பு

Update: 2021-06-30 21:10 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கோலாரம் வைரம்பாளையம் வயக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் வடிவேல் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவரும், கோதூர் அண்ணாநகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் (40) என்பவரும் சேர்ந்து வடிவேல் வீட்டின் அருகே சுமார் 100 லிட்டர் சாராய ஊறல் போட்டு இருப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த வடிவேல், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்த ேபாலீசார் அங்கிருந்த 100 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்