டாக்டருக்கு கொரோனா வாரியர் விருது

கொரோனா தொற்றுக்குள்ளாகி பணியாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா வாரியர் விருது வழங்கப்படுகிறது.

Update: 2021-06-30 20:48 GMT
ராமநாதபுரம், 
கொரோனா தொற்றுக்குள்ளாகி பணியாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொேரானா வாரியர் விருது வழங்கப்படுகிறது.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில்  கொரோனா காலகட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியின் பயனாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முனைப்புடன் பணியாற்றி தொற்றாளர்களின் உயிரை காப்பாற்றி உள்ளனர். மேலும், கொரோனா வார்டில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்காலிக டாக்டர்களை நியமித்து 4 சுழற்சி அடிப்படையில் கொரோனா வார்டில் சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது. 
இதன்காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் சாகுல் ஹமீது என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து மீண்டும் கொரோனா வார்டில் டாக்டர் சாகுல்ஹமீது பணியாற்றி வருகிறார்.
விருது
தன்நலம் கருதாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா வார்டில் பணியாற்றி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி பின்னர் குணமடைந்து மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்றிவரும் டாக்டர் சாகுல்ஹமீதுவை தமிழக அரசின் விருதுக்கு ஆஸ்பத்திரி டீன் பரிந்துரை செய்துள்ளார். இதன்படி தமிழக அரசு மாவட்டந்தோறும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பான சேவையாற்றி வரும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் கொரோனா வாரியர் விருதினை டாக்டர் சாகுல்ஹமீதுவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று (1-ந்தேதி) நடைபெறும் தேசிய டாக்டர்கள் தினத்தில் இந்த விருதினை வழங்க உள்ளது. கொரோனா வாரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள டாக்டர் சாகுல்ஹமீதுவிற்கு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்