தென்னை மரங்களில் திடீர் தீ விபத்து
தென்னை மரங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்யல்
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சேமங்கி பெரியார் நகர் பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரியார் நகர் பகுதியில் இருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்து அருகில் இருந்த தென்னை மரங்களிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று குப்பை மற்றும் தென்னை மரங்களில் வேகமாக பற்றிஎரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.