உடுமலையில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

உடுமலையில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-30 19:20 GMT
உடுமலை:
உடுமலையில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. 
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை சுகாதாரத்துறையினர், நகராட்சி பகுதி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்செல்கின்றனர்.
 முன்கள பணியாளர்கள்
இந்த நிலையில் ஆசிரியர்கள், அனைத்து அரசு துறை முன்களப்பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், உடுமலை ஶ்ரீகன்னிகாபரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் 100பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டு எந்தெந்த அரசு சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு போடப்படும் என்று பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் இந்த நோட்டீசை பார்த்து விட்டு திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்