தோகைமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
தோகைமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர், தளிஞ்சி, ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். முதலில் கூடலூரில் குளம் தூர்வாரும் பணி, தடுப்பணை கட்டும் பணி, அம்மா பூங்காவை பார்வையிட்டார். தொடு திருமலைரெட்டி பட்டியில் பிரதம மந்திரியின் புதிய தார் சாலை பணிகள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தளிஞ்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையான வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க குளித்தலை தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேசன், தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், குமரவேல், என்ஜினீயர் செல்வி, கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.