வேலூரில் 103 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயில்
வேலூரில் 103 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயில்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாவட்டங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதனால்தான் வேலூரை வெயிலூர் என்று அழைக்கிறார்கள். அந்தளவுக்கு வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இந்தாண்டு கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
வேலூரில் நேற்று காலை 9 மணி முதல் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. மதிய வேளையில் உக்கிரமாக சுட்டெரித்தது. அதன் காரணமாக வெயில் 103 டிகிரியை தாண்டி 103.3 டிகிரி பதிவானது. இதனால் சாலைகளில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மாலையில் வேலூர், கொணவட்டம், சேண்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் சிறிதுநேரம் லேசான மழை பெய்தது