விண்ணப்பங்களை வாங்க ஆர்வத்துடன் வந்த மாணவ மாணவிகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பள்ளிகளில் வாங்கி சென்றனர். அவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-30 18:15 GMT
கோவை

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பள்ளிகளில் வாங்கி சென்றனர். அவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கை

கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவ -மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

ஆனாலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆர்வம் காட்டும் மாணவர்கள்

இதனால் கோவை மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல்நிலை பள்ளியில், மாணவிகள் பெற்றோர்களுடன், வந்து விண்ணப்பங்களை வாங்கி பதிவு செய்து கொடுத்தனர். 

அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு அங்கிருந்த ஆசிரியர்கள் விளக்கமளித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவி செய்தனர்.

அப்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடை பிடித்து நின்றனர்.

பாடப்புத்தகம் வினியோகம் 

இந்த பள்ளியில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து உள்ளதாகவும், வாளையாறு, மாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்தும் இந்தப் பள்ளிக்கு வர மாணவிகள் ஆர்வம் காட்டு வதாகவும் தலைமை ஆசிரியை மணியரசி தெரிவித்தார்.

மேலும் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்