விராலிமலை அருகே பெண் தற்கொலை

விராலிமலை அருகே பெண் தற்கொலை

Update: 2021-06-30 17:58 GMT
விராலிமலை, ஜூலை.1-
விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது37). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கியநிலையில் கிடந்தார். இதனைகண்ட அவரது குடும்பத்தினர் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்