திருவண்ணாமலையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை அதிகப்படுத்த வேண்டும்
திருவண்ணாமலையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை அதிகப்படுத்த வேண்டும்
திருவண்ணாமலை
கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், திருச்சி, ஓசூர், மதுரை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், சேத்துப்பட்டு, ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
தற்போது அரசு வழிகாட்டுதல் படியும் பயணிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். எனவே திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை பயணிகளுக்கு ஏற்ப அதிகப்படுத்தி தரவேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.