வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு
தியாகதுருகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடை மனைவி சுமதி(வயது 35) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டைப் பூட்டி விட்டு தனது மகன்கள் பேரரசு, வல்லரசு, அக்கா மலர்கொடி, அக்கா மகள் விஜயசாந்தி மற்றும் மாமியார் பூங்கொடி ஆகியோருடன் வீட்டின் மாடிக்கு சென்று உறங்கினார்.
நேற்று அதிகாலை விஜயசாந்தி மாடியில் இறங்கி வந்து வீ்ட்டின் கதவை திறக்க முயன்றபோது கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவரது சித்தி சுமதியிடம் தெரிவித்தார். உடனே அவரை விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்ட சுமார் 2 பவுன் நகை மற்றும் வெள்ளி சங்கிலி, கொலுசு ஆகியவற்றை காணவில்லை. இரவில் சுமதி அவரது உறவினர்களுடன் மாடியில் உறங்கியதை அறிந்து கொண்டு யாரோ மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று விட்டான். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.