தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 34). இவருடைய மனைவி காளியம்மாள் (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இதனால் காளியம்மாள் ஏக்கத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.