பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் விஜயகாந்த் வேண்டுகோள்

விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் விஜயகாந்த் வேண்டுகோள்.

Update: 2021-06-30 10:54 GMT
சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு தளர்வுகளால் அறிவிக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிந்து நடமாடுவதோடு, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதேவேளை தடுப்பூசி பற்றாக்குறையை போக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தளர்வுகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். தளர்வுகளை மக்கள் முறையாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுமக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட கூடாது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அரசின் கூடுதல் தளர்வுகளை முறையாக பயன்படுத்துவோம். குடும்பத்தை காப்பாற்றுவோம். நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம்’’, என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்