செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்டபணிகள் - மாவட்ட கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-30 06:32 GMT
செங்கல்பட்டு,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் இணைந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்கள் உற்பத்தி பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு உயிர் உரங்களின் உற்பத்தி, உயிர் உரங்களின் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ள விவரங்களை காட்டாங்கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ரவீந்திரா எடுத்துரைத்தார். 

அடுத்தப்படியாக வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்பட்டுவரும் களப்பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து திருக்கழுக்குன்றம் வட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் சிஒ - 51 விதைப்பண்ணையை ஆய்வு செய்து விதைப்பண்ணையில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

தோட்டக்கலைத்துறையில் செயல்பட்டு வரும் மாநில தோட்டக்கலைத்துறை பண்ணை ஆத்தூரில் அமைந்துள்ளது. அங்கும் நேரில் சென்று பண்ணையையும் ஆய்வு செய்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலின் மேரி, உதவி இயக்குனர் சிவக்குமார். ஆகியோருடன் காய்கறிகள் பழவகைகள், நாற்றுப்பண்ணையும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்