சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-29 21:14 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே செட்டியூர் காளியம்மன் கோவில் அருகில் வசித்தவர் சுடலையாண்டி மகன் ஆனந்த் (வயது 36). இவர் பாவூர்சத்திரம்- கடையம் ரோட்டில் சலூன்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி சித்ரா. இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கூரையில், ஆனந்த் கழுத்தில் கயிறு மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட ஆனந்திற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்