மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது
மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,ஜூன்.
நாகையாபுரம் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக தங்களாச்சேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசலபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 59), சின்னசாமி (58) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 37 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல் சாப்டூர் போலீசார் அத்திப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது 48 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பழையூரை சேர்ந்த உக்கிரபாண்டியன் என்ற முருகன் (36) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.