லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருத்தங்கல் பகுதியில் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் திருத்தங்கல் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகம் அடையும் வகையில் 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாடார் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த விஜயரத்தினம் (வயது 50), கருப்பையா (70) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.48 ஆயிரத்து 710-ஐ பறிமுதல் செய்தனர்.