3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு

3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-06-29 18:05 GMT
கமுதி.
கமுதி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் வாசுகி (வயது24). இவரது குடும்பத்துக்கும் அதே ஊரை சேர்ந்த செல்லப்பாண்டியன் உறவினர் முருகன் (45) குடும்பத்துக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் வாசுகி, அவரது தாய் தங்கம் மற்றும் உறவினர் மகாலட்சுமி ஆகியோரை வெட்டி உள்ளார். 
இதில் படுகாயமடைந்த 3 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் வாசுகி தரப்பினர் தாக்கியதில் முருகன் படு காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கமுதி போலீசார் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் முருகன், வாசகி, தங்கம், மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்