கோவில் வருசாபிஷேகம்
உடன்குடி சந்தையடியூரில் முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி சந்தையடியூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து யாகசாலை பூஜை, பல்வேறு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு விநாயகர், அம்மன் கோவில் விமானங்களுக்கும், விநாயகர், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தையடியூர் ஊர் தலைவர் வாசுதேவன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் சிவக்குமார் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.