ஆதிவாசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கல்வி தொலைக்காட்சி குறித்து ஆதிவாசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடலூர்
கூடலூர் அருகே உள்ள அத்திப்பாளி பழங்குடியினர் குடியிருப்பு, நம்பலாக்கோட்டை, புறமணவயல், காரமூலா ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பிக்கப்படும் கால அட்டவணை குறித்தும் ஆதிவாசி மாணவ-மாணவிகளுக்கு கருணாநிதி, ரவிக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பழங்குடியினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.