தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

Update: 2021-06-29 15:55 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 274 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 84 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தேனியை சேர்ந்த 70 வயது முதியவர், 67 வயது மூதாட்டி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கம்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 491 ஆக அதிகரித்தது. 

மேலும் செய்திகள்