கோவில் வளாகங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

கோவில் வளாகங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Update: 2021-06-29 15:29 GMT
கோவை

நீண்ட நாட்களாக திறக்காததால் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்து வதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 7-வது முறையாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  

தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் கோவை உள்பட 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது. 

இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கல்வி புத்தகங்கள், பேக்கரிகள், சலூன் கடைகள், டீக்கடைகள், எலெக்ட்ரிக் கல் கடைகள், ஹார்டுவேர்ஸ், விற்பனை நிலையம், காலணி விற்பனை கடைகள், பாத்திர கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை, ஸ்டூடியோக்கள், ஜெராக்ஸ் கடைகள் திறக்கப்பட்டன. 

மேலும் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காக்கள் திறக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை.

சுத்தம் செய்யும் பணி

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கோவையில் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்க ளும் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தன. 

ஆனாலும் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் இல்லாததால் கோவில் வளாகங்கள் தூசிப்படிந்தன. சில கோவில்களில் மர இலைகள் குப்பைகளாக காட்சி அளித்தன. 

எனவே கோவில் ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு கோவிலை சுத்தப்படுத் தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று கோவை கோனியம்மன்கோவிலில் வளாகம் மற்றும் சுற்றுச்சுவர்களில் தண்ணீரை பீய்ச்சியடித்து ஊழியர்கள் சுத்தம் செய்தனர். 

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஊரடங்கில் அடுத்த தளர்வின்போது கோவையில் கோவில்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவில் வளாகத்தை சுத்தப்ப டுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் என்றனர்.

மேலும் செய்திகள்