கோவிலில் உள்ள ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை
கோவிலில் உள்ள ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை.
கலவை,
கலவை தாலுகா கோடாலி கிராமத்தில் கிருஷ்ணர் பஜனை கோவிலில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. இதனால் கடைக்கு சென்று ஒரு சில பெண்கள் பொருட்கள் வாங்க சிரமமாக உள்ளது. மேலும் மழைக்காலத்தில் ரேஷன் பொருட்கள் நனைந்து விடுகின்றன.
இதுகுறித்து கூட்டுறவு வங்கிக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேறு இடத்துக்கு ரேஷன் கடையை மாற்ற வேண்டும் அல்லது எதிரில் உள்ள கிராம சேவை மையத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.