கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கவேண்டும் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தல்
குரோம்பேட்டையில் ரூ.20 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தினார்.
சென்னை,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அகத்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளாக 11 பேரால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடத்தை நீதிமன்ற உத்தரவை ஏற்று, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் நேற்று இறங்கினர். அதன்படி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்களை இடிக்கும் பணி நடந்தது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி எம்.எல்.ஏ., அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் முன்னிலையில் காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் பெ.ஜெயராமன், செங்கல்பட்டு மண்டல உதவி கமிஷனர் கவேனிதா, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை கோவில் வசம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
தாமாக முன்வந்து...
கோவிலுக்கு சொந்தமான இடங்களை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலுக்கு உண்டான சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள அகத்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சேர்க்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், இது நம்முடைய சொத்து அல்ல, கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி, சிவன் சொத்து குல நாசம் என்ற வரிகளுக்கு ஏற்ப தாமாக முன்வந்து நிலங்களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்ந்து கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோவில் வசம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.