மழையில் சேதமடைந்த பள்ளிக்கூடத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு

செங்கோட்டையில் மழையில் சேதமடைந்த அரசு பள்ளிக்கூடத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2021-06-28 20:26 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழமைவாய்ந்த வகுப்பறை கட்டிடம் மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்த அரசு பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவரான நான், இதனை பழமை மாறாமால் புதுப்பிக்க ஏற்பாடு செய்வேன். பள்ளிக்கூடத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தருவேன்’ என்றார்.
தலைமை ஆசிரியா் பீட்டா் ஜெகதீஸ்போஸ், ஆசிரியா்கள் முருகன், அருண் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்