மது விற்ற 4 பேர் மீது வழக்கு
மது விற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் பொன்நகர், சூரியமணல், கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது பொன்நகரைச் சேர்ந்த விஜயன், கீழத்தெருவை சார்ந்த லட்சுமணன், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், ராஜாராமன் ஆகியோர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.