கர்நாடகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 24 மாவட்டங்களில் 100-க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பெங்களூரு:
பரிசோதனைகள்
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 2,576 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 37 ஆயிரத்து 206 ஆக உயர்ந்தது.
வைரஸ் தொற்றுக்கு மேலும் 93 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 34 ஆயிரத்து 836 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 5,933 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 755 ஆக உள்ளது. 97 ஆயிரத்து 592 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
21 மாவட்டங்களில்....
பெங்களூரு நகரில் புதிதாக 563 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மைசூருவில் 282 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 263 பேருக்கும், சிவமொக்காவில் 194 பேருக்கும், குடகில் 150 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.
உயிரிழப்பில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 18 பேரும், தட்சிண கன்னடாவில் 14 பேரும் இறந்தனர். 21 மாவட்டங்களில் உயிரிழப்பு 10-க்கும் குறைவாக பதிவாகி இருந்தது. 7 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.