கண்மாயில் மூழ்கி பெண் பலி

ராஜபாளையத்தில் கண்மாயில் மூழ்கி பெண் பரிதாபமாக பலியானார்.

Update: 2021-06-28 19:11 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் நல்லையா. இவரது மனைவி ஆறுமுகத்தாய். இவர்  உறவினர்களுடன் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செங்குளம் கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்