133 மதுபாட்டில்கள் பறிமுதல்

சேத்தூர் போலீசார் 133 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-28 19:04 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை சேத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த ஞானகுரு (வயது 50) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 133 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்