மல்லசமுத்திரம் அருகே மது விற்ற 2 பேர் கைது
மல்லசமுத்திரம் அருகே மது விற்ற 2 பேர் கைது
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கோணங்கிபாளையம் பிரிவு சாலையில் சிலர் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக மல்லசமுத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் காளிப்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சந்தோஷ் (வயது 19), கார்த்திக் (19) என்பதும் அவர்கள் தர்மபுரி தொப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி வந்து காளிப்பட்டியில் அதிக விலைக்கு (அதாவது 130 ரூபாய் மதுபாட்டிலை 250 ரூபாய்க்கு) விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
======