68 நாட்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு

68 நாட்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது

Update: 2021-06-28 18:12 GMT
ராமநாதபுரம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் அரசின் உத்தரவினை தொடர்ந்து அடைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் 68 நாட்களாக அடைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அரசின் தளர்வுகள் அறிவிப்பின்படி நேற்று முதல் மீண்டும்  அரண்மனை ராமலிங்க விலாஸ் அருங்காட்சியகம் மற்றும் கேணிக்கரை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதுகுறித்து அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது:- அரசின் உத்தரவினை தொடர்ந்து 68 நாட்களுக்கு பின்னர் நேற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ள புராதன சிறப்பு வாய்ந்த சிலைகள் உள்ளிட்டவை பாதிப்பு ஏதும் ஏற்படாதவகையில் சுத்தம் செய்யப்பட்டது. அருங்காட்சியகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும்போது உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னர் தான் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியுடன் அருங்காட்சியக பொருட்கள் பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்