மீன்பிடிக்க செல்ல முடிவு

தொண்டி, சோளியக்குடி மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு

Update: 2021-06-28 18:12 GMT
தொண்டி
தொண்டி, சோளியக்குடி, லாஞ்சியடி போன்ற பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் ஆழ்கடல் மீன் பிடித்தொழில் நடைபெற்று வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகு மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனையொட்டி விசைப்படகுகள் பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கொரோனா காரணமாக ஆட்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்பதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதால் எந்த பயனும் இருக்காது என மீனவர்கள் முடிவு செய்தனர். இதனால் 15 நாட்கள் காலதாமதமாக ஜூன் 30-ந் தேதி கடலுக்கு செல்வது என மீனவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து தொண்டி, சோளியக்குடி, லாஞ்சியடி பகுதிகளில் விசைப்படகுகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து படகுகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்