கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-06-28 18:01 GMT
காரைக்குடி,

காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் விசாலாட்சி ரோஷினி (வயது 29).இவருக்கும் காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 31) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ரோஷினி தனது கணவர் குடும்பத்தாரோடு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் கணவரும், அவரது குடும்பத்தாரும் ரோஷினியிடம் உன் வீட்டில் ரூ.5 லட்சமும்,, காரும் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும் என மனரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரோஷினி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் ரோஷினியின் கணவர் சபரிநாதன், மாமியார் காந்திமதி, உறவினர் காளீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்