பெண் தீக்குளிப்பு

பெண் தீக்குளிப்பு

Update: 2021-06-28 17:04 GMT
ஆலங்குடி,ஜூன்.29-
ஆலங்குடி அருகே உள்ள உருமநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி வீரம்மாள். இவருக்கும் சின்னத்துரையின் தம்பி ரவிச்சந்திரன் மனைவி மீனாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டு்ம் அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த மீனா வீட்டில் இருந்த மண்எண்ணய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த மீனாவை ரவிச்சந்திரன்  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்