கோவில்பட்டி அருகே விபத்தில் இளம்பெண் பலி

கோவில்பட்டி அருகே டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். மேலும் அவரது குழந்தை உள்ளிட்ட 2பேர் காயமடைந்தனர்.

Update: 2021-06-28 14:09 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே டிராக்டர் மீது மொபட் மோதியதில் இளம்பெண் பலியானார். மேலும் அவரது குழந்தை உள்ளிட்ட 2பேர் காயமடைந்தனர்.
மொபட்டில் பயணம்
கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு கண்ணன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 32). பிரபு கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனியாஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.  நேற்று ராஜலட்சுமி தனது குழந்தை தனியாஸ்ரீ மற்றும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ஜானகி ஆகியோருடன் கோவில் பட்டிக்கு மொபட்டில் புறப்பட்டு வந்தார்.
டிராக்டர் மீது மோதல்
சிப்பிப்பாறை விலக்கு அருகே வரும் போது மொபட்டின் டயர் திடீரென்று பஞ்சராகி சாலையில் ராஜலட்சுமியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. சிறிது தூரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டில் இருந்த ராஜலட்சுமி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 
சாவு
அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 3 பேரையும் மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த தனியாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்