முதியவருக்கு கத்திக்குத்து
கொடுக்கல்-வாங்கல் தகராறில் முதியவர் கத்தியால் குத்தப்பட்டார்.
நத்தம்:
நத்தம் அருகே உள்ள முளையூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 74). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் (45) என்பவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்து வந்தது.
அதன்படி நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தான் வைத்திருந்த கத்தியால் மகாலிங்கத்தை குத்தினார்.
இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.