மண்ணிவாக்கம் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

மண்ணிவாக்கம் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-28 03:09 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மண்ணிவாக்கம் ஊராட்சி பகுதிக்கு திடீரென நேரில் சென்று மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தார். இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு வெளியே வரும் குடிநீரை பரிசோதனை செய்தார். அதன் பின்னர் மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ்குமார், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன், ஒன்றிய மேலாளர் பெருமாள், ஒன்றிய பொறியாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்