6 மாத பெண் குழந்தையை பூ பாதை அமைத்து வரவேற்ற தந்தை குடும்பத்தினர்

பீதரில் 6 மாத பெண் குழந்ைதயை பூ பாதை அமைத்து தந்தை குடும்பத்தினர் வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2021-06-27 21:27 GMT
பூக்கள் தூவி வரவேற்கப்பட்ட குழந்தை
பீதர்:

பெண்கள் நிகரானவர்கள்

  தற்போதைய நவீன காலத்தில் ஆண்களுக்கு அனைத்து விதங்களில் பெண்கள் நிகரானவர்கள் என்ற நிலை வந்து விட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் உள்ளது. இதனால் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகளை தற்போது அனைவரும் விரும்ப தொடங்கி உள்ளனர்.

  இந்த நிலையில் 6 மாத பெண் குழந்தையை தந்தை குடும்பத்தினர் பூ பாதை அமைத்து வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

6 மாத குழந்தை

  கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி பூஜா. என்ஜினீயரான ரோகித் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூஜா கல்லூரி விரிவுரையாளர் ஆவார்.

  இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக பூஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் பூஜா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில், குழந்தையுடன் தனது கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.

பூ பாதை அமைத்து வரவேற்பு

  அதன்படி நேற்று பூஜா தனது குழந்தையை தூக்கி கொண்டு தனது கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது குழந்தையையும், பூஜாவையும் வரவேற்க கணவர் வீட்டில் பூ பாதை அமைத்து இருந்தனர்.

  அந்த பூ பாதையில் குழந்தையை தூக்கி கொண்டு பூஜா நடந்து வர, ரோகித், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் பூஜாவையும், குழந்தையையும் பூ தூவி உற்சாமாக வரவேற்றனர். இதனை சற்றும் எதிர்பாராத பூஜா ஆனந்்த கண்ணீர் விட்டார். இதுதொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

மேலும் செய்திகள்