கிணற்றில் மூழ்கி மெக்கானிக் சாவு

நெல்லை அருகே கிணற்றில் மூழ்கி மெக்கானிக் இறந்தார்.

Update: 2021-06-27 20:03 GMT
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள சிதம்பர நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்தது. உடனே ராஜேந்திரபிரசாத் அந்த பந்தை எடுப்பதற்காக கிணற்றுக்குள் குதித்தார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி, ராஜேந்திர பிரசாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
தொடர்ந்து நேற்று மீண்டும் ராஜேந்திர பிரசாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்