கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவு

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Update: 2021-06-27 19:09 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 10,996 பேரில், 195 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 10,542 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 259 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலேயே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. ஆனால் அரியலூர் மாவட்டம் 14-வது இடத்தில் உள்ளது.
  

மேலும் செய்திகள்