செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது
விருதுநகரில் செல்போன் பறிக்க முயன்ற 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
தூத்துக்குடி மாவட்டம் வீரபட்டியை சேர்ந்தவர் செண்பகராஜ் (வயது 34). லாரி டிரைவரான இவர் கேரள மாநிலத்திலிருந்து லாரியில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வந்து இறக்கி விட்டு அங்கிருந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக சிவகாசி விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் லாரியை விருதுநகர் ரோட்டில் ரோடு ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த சக்திவேல் மற்றும் பெரியசாமி என்ற அழகர் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து லாரி டிரைவர் செண்பகராஜிடம் செல்போனை பறிக்க முயன்றனர். தர மறுத்த செண்பகராஜ் தாக்கி காயப்படுத்தினார். அப்போது அங்கு வந்த சங்குரெட்டி பட்டியை சேர்ந்த தங்கராஜ், வடமலாபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோர் உதவியுடன் சக்தி வேல் மற்றும் அழகரை பிடித்து செண்பகராஜ் ஆமத்தூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், சக்திவேல் மற்றும் அழகர் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.