இறைச்சிக்கடைகளில் போலீஸ் உதவி கமிஷனர் திடீர் ஆய்வு

இறைச்சிக்கடைகளில் போலீஸ் உதவி கமிஷனர் திடீர் ஆய்வு

Update: 2021-06-27 19:03 GMT
அனுப்பர்பாளையம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து முழு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. 
இதன் எதிரொலியாக திருப்பூரில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி உளளது. இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் இறைச்சிக் கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். குமார்நகர், எஸ்.ஏ.பி., காந்திநகர், பெரியார்காலனி உள்பட வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் போலீசாருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டார். 
அப்போது பொதுமக்கள் கூட்டமாக நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டார். தமிழக அரசின் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களை எச்சரித்தார். 

மேலும் செய்திகள்