கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது தாக்குதல்

பூவந்தி அருகே கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-27 18:57 GMT
திருப்புவனம்,

பூவந்தி அருகே கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

பணத்தகராறு

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 70). இவரது மகன் கிருஷ்ணன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வேலை பார்த்த போது சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திரகுட்டி என்ற அழகர்சாமியிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் இந்த பணத்தை சித்தலூரில் உள்ள தனது தம்பி சிவகுருநாதனுக்கு அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணனிடம் அழகர்சாமி கூறியுள்ளார். அவர் கூறியபடியே கிருஷ்ணனும் மாதந்தோறும் சிவகுருநாதனுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணன் துபாயிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது சிவகுருநாதன் தனது அண்ணனுக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு கிருஷ்ணன் நான் கடன் பணம் முழுவதையும் கொடுத்து விட்டேன் என கூறி இருக்கிறார்.

தாக்குதல்

இந்த நிலையில் ஏழுமலை வீட்டில் இருந்த போது அங்கு வந்த சிவகுருநாதன், மற்றொருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் தகராறு முற்றியதில் ஏழுமலையையும், அவரது மனைவி லி்ங்கமுத்து, மருமகள் காசிமுத்து ஆகியோரை திட்டி காயப்படுத்தி உள்ளனர். இது குறித்து ஏழுமலை பூவந்தி போலீசில் புகார் செய்து உள்ளார்.இது தொடர்பாக சிவகுருநாதன், மற்றொரு நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 3 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்