வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லாததால் திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது.
வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லாததால் திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது.
திருப்பூர்
வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லாததால் திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்துகொடுக்கப்படுகின்றன.
இதில் தங்கியிருந்து பலரும் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சமும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சமும் இருக்கிறார்கள்.
இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். இந்த வடமாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் திருப்பூரில் தான் இருப்பார்கள்.
சொந்த ஊருக்கு...
இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் 100 சதவீத தொழிலாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று ரெயில்களில் செல்லவில்லை. வடமாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரெயில்கள் செல்லும். இதிலும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.