மீன் மார்க்கெட் மீண்டும் உறையூர் காசிவிளங்கி பகுதிக்கு மாற்றம்

மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக மீன் மார்க்கெட் மீண்டும் உறையூர் காசிவிளங்கி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-06-27 18:43 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உறையூர் காசி விளங்கி பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து பஸ் போக்குவரத்து இயக்கப்படாததால் காலியாக இருந்த மத்திய பஸ் நிலையத்துக்கு மீன் மார்க்கெட்டை மாற்றி கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.  அதன்படி கடந்த 20 நாட்களாக மத்திய பஸ் நிலையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா குறையத் தொடங்கியதால் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது. 

இதையொட்டி மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் மீண்டும் உறையூர் காசி விளங்கி மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், காசி விளங்கி மீன் மார்க்கெட்டுக்கு வரும் கண்டெய்னர் லாரிகளை மீன்களை இறக்கியவுடன் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அங்கு மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்