காதலனுடன் ஓடிய மாணவியின் குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல்
காதலனுடன் ஓடிய மாணவியை தேடி குமரிக்கு வந்த குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
காதலனுடன் ஓடிய மாணவியை தேடி குமரிக்கு வந்த குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவி
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் மாணவியின் குடும்பத்தார் நடத்திய விசாரணையில் மாணவி குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை ேசர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்தது ெதரியவந்தது. அந்த வாலிபர் தான் மாணவியை அழைத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல் வந்து, வாலிபரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். ஆனால் வாலிபரும், மாணவியும் அங்கு வரவில்லை. அதோடு வாலிபர் கூலி ேவலை பார்த்து வருவதும், அவர் வீட்டுக்கு வந்தே பல மாதங்கள் ஆவதும் தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வாலிபரையும், மாணவியையும் தேடி கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மாணவியை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில் மாணவியை கண்டுபிடித்து தர போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், இதனால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் அல்லது ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் நேற்று முன்தினம் இரவு மிரட்டல் விடுத்து சென்றனர். எனவே கலெக்டர் அலுவலகம் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலும், கலெக்டர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் தற்கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யாரும் அங்கு வரவில்லை. எனினும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் கலெக்டர் அலுவலகமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது.