மோகனூரில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

மோகனூரில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-27 18:03 GMT
மோகனூர்,

மோகனூர் வள்ளியம்மன் கோவில் அருகே உள்ள பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 31). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியே வந்தேபோது, ஜன்னல் வழியாக 2 வாலிபர்கள் கையை விட்டு செல்போன் திருட முயல்வதை பார்த்தார். 

இதையடுத்து 2 பேரையும் பிடிக்க முயன்றபோது, அவரது பிடியில் இருந்து நழுவி 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் சந்தோஷ்குமார் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு தப்பியோட முயன்றனர்.

அப்போது அங்கு கிடந்த கல்லில் அடிபட்டு 2 வாலிபர்களும் கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (வயது 19), ரங்கசாமி மகன் லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. 

பின்னர் செல்போன் திருட முயன்றதாக 2 வாலிபர்களையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார். இதையடுத்து 2 பேரும் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்