சேந்தமங்கலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேஸ்திரி கைது
சேந்தமங்கலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேஸ்திரியை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், சேந்தமங்கலம் பேரூராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவருக்கும் இடையே இருவரது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது மேஸ்திரி பிரகாஷ், விக்னேஷின் சாதி பெயரை சொல்லி திட்டி தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சேந்தமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கட்டிட மேஸ்திரி பிரகாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.