செல்போன் கடைக்காரருக்கு கத்திக்குத்து

செல்போன் கடைக்காரருக்கு கத்திக்குத்து

Update: 2021-06-27 17:59 GMT
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 25). மதுரையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த யுவராஜ்(23) என்பவர் செல்போனை வேலை பார்ப்பதற்காக விக்னேசிடம் கொடுத்ததாகவும், அதை சரியாக பழுது பார்க்கவில்லை என்று இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து விக்னேசை கத்தியால் குத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ், ராகுல் ஆகிய ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்