பந்தலூர் அருகே மதுகடத்தி வந்த வாலிபர் கைது

பந்தலூர் அருகே மதுகடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-27 17:20 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள கக்குண்டி சோதனைச்சாவடியில் மதுகடத்தலை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து கொளப்பள்ளி நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் காரில் மறைத்து வைத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் கொளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ (வயது 35) என்பதும், கேரளாவில் இருந்து மதுகடத்தி வந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்