சொகுசு காரில் மணல் திருட்டு
சொகுசு காரில் மணல் திருடிய 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கமுதி,
கமுதி காவல் சரகத்திற்கு உட்பட்ட மண்டல மாணிக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள், போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் உள்பட போலீசார் கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சொகுசு காரில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் மூடைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சொகுசு காரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மண்டல மாணிக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன்கள் திருமூர்த்தி (வயது28), கணேசன் (24), கருப்பையா மகன் ஹரிகிருஷ்ணன் (26) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து கார் மற்றும் 40 மணல் மூடைகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் மண்டல மாணிக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.